சனி, 13 நவம்பர், 2021

இளையராஜாவின் வீழ்ச்சி, மொத்த தமிழ் படத்தின் வீழ்ச்சி!

 



ஜாதி தான் காரணம். நான் இங்கு, உண்மை சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் சொல்கிறேன்.

வைரமுத்து ஒரு திமிர் பிடித்த, வர்க்கத்தை சேர்ந்தவர். பாலச்சந்தர் மணிரத்னம் போல! அண்ணா பெரியார் திராவிட இயக்கம் ஆரம்பித்தது பெருந்தலைவர் காமராஜரை வீழ்த்தியது போல், இந்த மூன்று நபர்களும், ரோஜா, அண்ணாமலை என்று ரஜினி என்ற அடிமை கொண்டு, ராஜாவை வீழ்த்தினர்.

தமிழ் சினிமா வரலாற்றில் இளையராஜா காமராஜர் மாதிரி பல முன் மாதிரிகள் உருவாக்கினார். அண்ணாதுரை MGR கொண்டு காமராஜர் பொற்காலத்தை அழித்தது போல், பாலசந்தர் ARR கொண்டு இளையராஜாவின் பொற்காலத்தை நவீனம் கொண்டு தமிழிசையை (பாஜக தலைவர் இல்லை ) தமிழ் நாட்டை விட்டு விரட்டினார்!

மணிரத்னம் வெற்றி கரமாக வட இந்தியர் வேட்டை காடாக தமிழ் சினிமாவை மாற்றினார்! இளையராஜா இசை இல்லை என்றால் மௌன ராகம் வெற்றி இல்லை. மௌன ராகம் இல்லை என்றால் மணி ரத்னம் இல்லை, மணிரத்னம் இல்லை என்றால் ரோஜா இல்லை.

மௌன ராக பாடல்கள் வெற்றிக்கு காரணம் வாலி! ஒரு Middle class Family life crisis அழகாக பாடலில் இளையராஜா சொன்ன விதம் வெற்றி பெற காரணம் வாலியின் "நிலாவே வா ", மன்றம் வந்த வரிகள்!

வைரமுத்து இளையராஜா மீது சொன்ன குற்றசாட்டு, எனது பாடல் வரிகளை ராஜா மாற்றினார்.

சங்கீதத்துக்கு பாட்டு எழுதுவது ஒரு கலை. அதை ஒரு இசையமைப்பாளரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

வைரமுத்து இளையராஜா அறிமுகப்படுத்தி, அவருக்கு பெரும் வெற்றி வாங்கி தந்த பாடல், " இளைய நிலா பொழிகிறது ".

இந்த பாடலுக்கு வைரமுத்து எழுதிய வரிகள், " சலவை நிலா பொழிகிறது " என்று எழுதினார். இந்தப் பாடல், இந்த வரிகளில் வந்தால் ஹிட்டாகி இருக்காது.

இளையராஜா, சலவை நிலா என்பதை இளைய நிலா என்று மாற்றினார். இளையராஜா ஒரு நல்ல கவிஞர், என்று கவிஞர் வாலி சொல்லி இருக்கிறார்.

உண்மையில் Ego என்று கர்வம், இளையராஜாவுக்கு இல்லை. இளையராஜாவுக்கு இருப்பது, வித்யா கர்வம்!

ஆனால் வைரமுத்து பாலச்சந்தர் போன்ற நபர்களுக்கு இருப்பது வறட்டு கர்வம்.

கர்வத்துடன் ஜாதி திமிர் சேர்ந்தால், என்ன வரும்? கொலைவெறி தான் வரும்!

பாரதிராஜா வைரமுத்து, போன்றவர்கள் ஒருகட்டத்தில் அந்த அளவுக்கு சென்று, இளையராஜாவின் அற்புதமான சங்கீத காலகட்டத்தை, கொலை செய்தார்கள்!

விழுந்தது இளையராஜா இல்லை, தமிழ் திரைப்படம். இளையராஜா இருந்தவரை, ஒரு திரைப்படம் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஓடும். இளையராஜாவின் வீழ்ச்சி, மொத்த தமிழ் படத்தின் வீழ்ச்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..