வெள்ளி, 17 நவம்பர், 2023

ஒரு புகார் மனுவை படித்து பார்க்காததினால் வந்த விளைவு,.....

  1.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடத்தும் திங்கள் தின குறை தீர்ப்பு கூட்டமனாலுமு் சரி, மாநகராட்சி அலுவலகம் நடத்தும் மாதந்திர குறை தீர்ப்பு கூட்டமனாலுமு் சரி, தற்போது மாநகர காவல் ஆணையர் அலுவலகம் நடத்தும் குறை தீர்ப்பு கூட்டமனாலும் சரி, காவல் நிலையத்தில் கொடுக்கும் புகார் மனுவாக இருந்தாலும் சரி, மேற்கண்ட இடங்களில் கொடுக்கும் மனுக்களை படித்து பார்த்து சந்தேகங்களை கேட்டு  , மனுவில் குறிப்பிட்டுள்ள எதிர் மனுதாரர்களின் செல் நம்பர் மற்றும் முகவரிகளை சரி பார்ப்பதே கிடையாது,
  2. என் அனுபவத்தில் சொல்கிறேன். மனுவை கொடுத்தவுடனே.. மனுவை கையில் வைத்துக்கொண்டே.. என்ன பிரச்சனை சொல்லுங்கள் என்கிறார்கள். சிலர் மனுவின் சாரம்சத்தை கூறி விடுவார்கள். என் போன்ற பலர். திக்குமுக்காடித்தான் போகிறார்கள். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இன்று வரை நானும்  பல மனுக்களை கொடுத்திருக்கிறேன். அப்ப எல்லாம் சரியாக மனுவில் எழுதியிருப்பதை கூறிவிடுவேன். காது கேளாமை  நிலைமை ஏற்ப்பட்டவுடன் திக்குமுக்காடும் நிலைதான்.
  3. சமீபத்தில் 27.09.2023 அன்று மதுரை தெப்பக்குளத்தில் நடந்த காவல் ஆணையர் அலுவலகம் நடத்திய குறை தீர்ப்பு  முகாம் நடந்தது, அந்த கூட்டத்தில் நான் வசிக்கும் தெருவில் வசிக்கும்  காளவாசல் பாண்டியன் நகரில் விறகு கடை நடத்தும் மனோகர் என்பவர்.   கணேசன்  என்பவர் மீது புகார் அளித்தார். வழக்கமான நடை முறைகளின்படி மனுவை படித்துப் பார்க்காமல், மனுதாரிடம்  எதிர் மனுதாரரை பற்றிய விபரம் எதுவும் விசாரணை செய்யாமல் காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து எனது செல் போனுக்கு அழைப்பு வந்தது, அதில் பேசிய பெண் காவலர் ஒருவர். 
  4. கணேசனா என்றார்
  5. “ ஆமாங்க“ என்றதும். உங்கள் மீது மனோகர் என்பவர் புகார் அளித்துள்ளார். தெப்பக்குளத்தில் நடைபெறும் கூட்டத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆகவும் என்று கூறினார். அவர் போன் செய்தபோது மணி 12.30. நான் அவசரமாக தயாராகி தெப்பக்குள முகாம் கூட்டத்திற்கு சென்று சேர்ந்தபோது 1.00 மணிக்கு மேல் ஆகிவிட்டது, என் பகுதி காவல் நிலைய பகுதியை கண்டறிந்து சென்றபோது அங்கிருந்த பெண் உதவி ஆய்வாளர் என்ன கூட்டம் முடிந்த பிறகு வர்ரீங்க என்றார்.. எனக்கு தகவல் 12.30 மணிக்குத்தான் தெரிவித்தார்கள் என்றபடி செல்போன் அழைப்பை காண்பித்தேன். என் மீதான புகார் விபரத்தை கேட்டபோது,.நாளைக்கு ஸ்டேசன்ல வந்து தெரிஞ்சுகுங்க.. இப்ப வந்து ஆஜரானதற்கு மனு எழுதிக் கொடுஞ்க என்றார். என்ன புகார் என்றே தெரியாதபோது என்னவென்று எழுதி கொடுப்பது என்று தயங்கியபோது,
  6. ஒன்னுமுல்ல.. நான் சொல்றபடி எழுதி கொடுங்க என்றார்.  அவர் சொல்படி எழுதி கொடுத்த மனு



மறுநாள் காலை காவல்நிலையம் சென்றபோது அந்த உதவி ஆய்வாளர் விசாரணை செய்தார். அப்போதுதான் தெரிந்தது, மனோகர் புகாரில் கூறப்பட்ட வக்கில் கணேசன் நான் அல்ல என்று. நான் வக்கீல் கணேசன் அல்ல பிரிண்டிங் கணேசன். நானும் மனோகரும் உறவுக்காரர்கள் அல்ல..அவரிடம் நான் இடமும் வாங்கவில்லை.பணம்பற்றிய கொடுக்கல் வாங்கல் எதுவும் இல்லை  என்றபோது .புகார் கொடுத்த மனோகரிடம் செல்லில் பேசினார். பேசிய பிறகு நீங்கள் இல்லை  போங்க என்றார். 

ஒரு வாரம் கழித்து உதவி ஆய்வாளர் ஒருவர் பேசினார். விசாரணைக்கு ஆஜர் ஆகிறேன் என்று எழுதி கொடுத்துவிட்டு ஆஜராகமல் இருப்பது என்ன அர்த்தம் எனறார். அவர் பேசுவது எனக்கு சரியாக கேட்காததால். பக்கத்தில் இருந்த ஒருவரின் உதவியை நாடி விபரத்தை சொல்லச் செய்தேன்.

குறை தீர்க்கும் கூட்டத்தில் எழுதி கொடுது்தபடி மறுநுாள் 28.09.2023 அன்று காலையில் ஸ்டேசனில் ஆஜராகி பஞ்சவர்ணம் என்ற உதவி ஆய்வாளரிடம் பேசி..மனோகர் என்பவர் கொடுத்த புகாரில் உள்ள கணேசன் நான் அல்ல. அது வேறு ஒரு கணேசன் தவறுதலாக என்னை குறிப்பிட்டுள்ளார்கள். என்னுடைய செல் நம்பர் எப்படி பதிவாகியது என்று தெரியவில்லை. எல்லா விபரமும் பஞ்சவர்ணம் மேடத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறச் சொன்னேன்.

பிரச்சனை இனி ஒய்ந்தது என்று நிணைத்திருந்த நிணைப்பில் மீண்டும் கல்லெறியப்பட்டது, நான்கு நாட்களுக்கு முன்னால் திரும்பவும்  பல தடவை போன் வந்தது, வெளியில் அலைந்து திரிந்து வீட்டுக்கு வந்தபின் செல் போனை திறந்து பார்த்தபோது  நாலைந்து நம்பர் பதிவாகி இருந்தது, ஒவ்வொருத்தரிடம்  வரிசையாக பேசிக் கொண்டு வந்தபோது,.மனோகர் புகார் பற்றி விசாரித்தார். மனோகர் கொடுத்த புகார் மனுவை முதலில் படியுங்கள். அதில் என் பெயர் என் தந்தை பெயர். என்னுடைய வீட்டு முகவரி, இப்பொழுது பேசிக்கொண்டியிருக்கும் செல்போன் எண்ணா என்று சரி பாருங்கள் சரிதான் என்றால். நாள் தேதி நேரம் குறிப்பிட்டு எனது முகவரிக்கு அதாவது மனோகர் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு ஒரு சம்மன் அனுப்புங்கள். எனக்கு உதவியாக இருக்குமு் என்றேன். எதுவும் சொல்லாமல் நிறுத்திக்கொண்டார்.


இவரைத் தொடர்ந்து, மறுநாள் 8.11.2023  இரவு ஒன்பது மணிக்கு மேல் போன் வந்தது, பேசினேன். அதே காவல் நிலையத்திலிருந்து இன்ஸ்பெக்டர் பேசுவதாக தெரிவித்தார். காலையில் ஸ்டேசனுக்கு வருமாறு உத்தரவிட்டார். என்ன விபரம் என்று கேட்டதற்கு கோபமாக மனோகர் புகாரை குறிப்பிட்டார். அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள கணேசன் நானல்ல.. நடந்த விபரத்தை கூறிக் கொண்டு இருக்கும்போதே செல்லை கட் செய்துவிட்டார். 


நான் மேலே சொன்னபடி ஒரு புகாரை படித்துப் பார்க்காததினால் வந்த விளைவுதான் இது,.என் செல் நம்பர் எப்படி கிடைத்தது  என்று யோசிக்கும்போது    எனக்கு எதிரான சதி வேலையாக இருக்குமோ என்று தெரிகிறது,  அந்த சதி பற்றி அடுத்த பதிவில்..............


இதையும் தெரிந்து கொள்க...


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..