#பெரியார் சரியாக #குளிக்கமாட்டார்!பெரியார் விரும்பி அணியும் #உடை கைலி!பெரியார் விரும்பும் #உணவு மாட்டுக்கறி!இந்த மூன்றிலும் ஒரு நுட்பமான அரசியல் ஒளிந்துகிடக்கிறது.#தாழ்த்தப்பட்ட மக்களை #கோவிலுக்குள் விடமறுத்த பார்ப்பன உயர்சாதியினர்அதற்கு கற்பித்த காரணங்களில் ஒன்று" அவர்கள் சரியாக #குளிப்பதில்லை"இந்த கருத்து கற்றறிந்த #தமிழ்க்கடல்மறைமலை அடிகளாரிடமிருந்து, #காஞ்சி காமகோடி வரையில் பொது புத்தியாகவே இருக்கிறது.இப்படிப்பட்டவர்களை பார்த்து #பெரியார் கேட்கிறார்;#இந்து மதத்தை பொறுத்தவரை நான் #உயர்ஜாதி. ஆனால் நான் தினசரி #குளிப்பதில்லை. என்னை எந்த கோவிலிலும்உன்னுடைய #தர்மப்படி தடுக்க முடியாதே?பொதுக்குளத்தையும், நீராதாரங்களையும் தாழ்த்தப்பட்டமக்கள் பயன்படுத்த முடியாமல்#உயர்ஜாதி என்று தங்களை நினைத்துக்கொண்டிருப்போர் தடைசெய்து வைத்துவிட்டு அவர்கள் குளிக்காததால் கோவிலுக்குள் விடுவதில்லை என்று கூறுவது கடைந்தெடுத்த #பித்தலாட்டமா இல்லையா?அடுத்து கைலி...இன்றுவரை #கைலி என்பது அடித்தட்டு மக்களின் உடை...கைலி அணிந்தவருக்கு காவல் துறையினர் தரும் மரியாதையே தனி...கோவிலுக்குள் கைலி அணியத் தடை!பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் முன்பாக #அரையாடை அணிந்துசென்ற #காந்தியாரைசிலாகித்து பேசும் அதே சமூகம்தான்பொது இடத்தில் கைலி அணிபவரைக் கண்டால் முகம் சுழிக்கிறது.வேட்டியை விட கைலி எல்லாவிதத்திலும் வசதியானது. ஆனால் கைலிக்கு #மதச்சாயம் பூசப்பட்டது. #பார்ப்பனர்களின் உடைவரிசையில் இன்றுவரை கைலிக்கு இடமில்லை!பொதுஇடத்தில் #பெரியார் கைலியுடனே வலம்வந்தார்.பல்வேறு நிகழ்வுகளில் #முதல்வர், #கவர்னர்ஜெனரல், உள்ளிட்ட ஆகபெரிய பதவிகளை வகித்தவர்களின் முன்பாக கைலி அணிந்தேசென்றார் பெரியார். #கைலி என்பது அவரது உடல்நிலைக்கு மட்டுமல்லாது அவரது உள்ளத்தின் நிலைக்கும் பொருத்தமாகவே இருந்தது.தீவிர #வைணவ குடும்பத்தில் பிறந்த பெரியார் தான்மட்டும் மாட்டுக் கறி உண்ணுவதோடு நிற்காமல்,தன் தொண்டர்களையும் மாட்டுக் கறி உணவிற்கு தயார் படுத்துகிறார்.நினைத்துப் பாருங்கள்...இன்றைக்கு சுமார் அய்ம்பது ஆண்டுகளுக்குமுன்பு கூட்டம் முடிந்தவுடன் பொதுஇடத்தில் #மாட்டிறைச்சி விருந்து!#பெரியாரியலை ஏற்ற தொண்டர்கள்அனைவரும் மாட்டுக் கறி உண்ணுதல்.இது #ஏழைகளின் உணவு, உழைக்கும் மக்களின் உணவு, எங்களின் உணவு.இதோ... #மாட்டிறைச்சி சாப்பிடுகிறோம். என்ன செய்யும் உன் மதம்? என்ற சவாலை #வைதீகத்தின் மீது வீசியவர் பெரியார்.இப்படியான... #உடல்தீட்டு, #உடைத் தீட்டு, #உணவுத் தீட்டு அனைத்திற்கும் எதிர்வினையாகதன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் #பார்ப்பன வேத இதிகாச புரட்டை உடைப்பதற்கும்,#ஜாதி- மத அடையாளங்களை துடைப்பதற்கும்,#தீட்டு- புனிதம் ஆகிய கற்பிதங்களை நொறுக்குவதற்கும் பயன்படுத்தியவர் பெரியார் ஒருவரே...(மீள்)
வியாழன், 15 ஜூலை, 2021
மாமனிதர்...
-
ஓடாத மானும் போராடாத சமூகமும் என்னா ஆகும் .............. ........... சாதிவெறி சிங்கத்திடமிருந்து ஓடாத மானும் இல்லே.......... மதவெறி பிடித...
-
எனக்கு அவர் யாரென்று தெரியவில்லை.. என்னை அவர் தெரிந்து கொண்டுஎன்ருகில் வந்து.. வணக்கம் ! நல்லாயிருக்கிங்களா? என்றார். நானும் பதிலுக்கு வண...
-
அந்தத் தெருவில் உள்ளவர்கள் உற்சாகமாய் வெடி வெடித்து கொண்டு இருந்தார்கள்..... ஒரு வீட்டில் மட்டும் ஒரு கத்தலும் ஒரு கதறலும் கேட்டுக் கொண்டி...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..