வியாழன், 6 பிப்ரவரி, 2025

என்னத்த சொல்ல.............

 













எனக்கு அவர் யாரென்று தெரியவில்லை.. என்னை  அவர் தெரிந்து கொண்டுஎன்ருகில் வந்து.. வணக்கம் ! நல்லாயிருக்கிங்களா? என்றார்.

நானும் பதிலுக்கு வணக்கமுன்னு சொல்லி தற்போதைக்கு நல்லாயிருக்கேன் என்றேன்.

சிறிது நேரத்துக்கு பிறகு  சிறு உதவி செய்ய வேண்டுமே? என்றார்.

நானும் என்ன உதவி என்றேன்..  இவருக்கு அருகில் செல்போனை நோண்டிக் கொண்டிருந்த  சிறுவனை அழைத்தார். அந்த சிறுவன் செல்போனை நோண்டியபடி எங்கருகில் வந்து என்ன கூப்பிட்ட என்றபடி வந்து நின்றான்.

அவனை சுட்டிக்காட்டி..செல்போனால் இவன் படிக்க மாட்டுகிறான். இந்த செல்போனை நிறுத்துவதற்கு எதாவது ஒரு வழி சொல்லேன் என்றார்.

 கடன்தான் கேட்பார்.. நிலமையைச் சொல்லி  மறுத்துவிடலாம் என்று நிணத்திருந்த நான் திகைத்துதான் போனேன். செல் போனை நோண்டுவதை நிறுத்துவது அவ்வளவு லேசுபட்ட காரியமா  ? என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை.. என்னடா..இந்த ஆளு.. என்னை என்ன நிணச்சு இப்படி கேட்கிறாரு ன்னு நிணைத்தேன்.

என்ன வழி சொன்னாலும் அது முடியாதே! என்றேன்...மறுத்து உன்னால முடியும் ஒரு வழிய சொல்லு என்றார்.

என்ன வழிடா சொல்றதுன்னு யோசித்தேன். குரு சொன்ன கதைப்படி..சரி.. நாளைக்கு வா... ஒரு வழி சொல்கிறேன் என்றேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..