டேய் குடிகார நாயி அங்க என்னடா பன்னுற...”
“ யாராது”...........??
“ குடிகார நாயி நா..யாருன்னு தெரியலையா...”???
“ ஆ... அம்பாளா பேசுவது ”..
“ ஆமாண்டா...குடிகார நாயி ”.....
“ தாயே... இனிமேல் ஒரு போதும் என்னை குடிகார நாயின்னு கூப்பிடாதே..! ”
“ அட., குடிகார நாயை முத்துமாலைன்ன கூப்படச் சொல்ற ...”
“ இல்ல...தாயே ....இல்ல...மதுப்பிரியன் என்று அழை தாயே” நீ தமிழ் தாய் அல்லவா..? தமிழிலே அழை....தாயே..!!
அட..நாதாரிப்பயல.... இப்ப... என்ன ஆங்கிலத்திலா உன்னை கூப்பிட்டேன்...
“ஆம் தாயே.... தாங்கள் குடிகார நாயின்னு சுப்பிட்டது. சேரி பாசை தாயே...”
“ அடபாவி.....ஒரு ஆளு கேட்டது சரிதாய்தாண்டா இருக்கு..? அம்பாள் எந்தக் காலத்திடா பேசினாள் என்று...????
.............................................
காலத்தின் கோலத்த பாரு..?? கோயில் பூசாரியே தண்ணிய போட்டு சாமி சிலைகிட்ட கதாக்கிறான் பாரு...?
கொரோனாவுல கோயில் வருமானம் போச்சேன்னு தண்ணிய போட்டு ..அம்பாள் முன்னாடி புலம்பி கிட்டட இருக்கிறான் நீ வேற.... நாளைக்கு கடைய அடைக்க போறாய்களாம்... பூசாரிகிட்ட சொல்லீருப்பா... போத தெளிஞ்சவுடன் நமக்கு சாபம் விட்டுட போறான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..