
அன்புடையீர் வணக்கம்:
குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் டாக்டர் ரன்பீர் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவினை கலைத்திட வேண்டும் என்பதற்காகவும்,
நான்கு மாதங்களாக மூடியிருக்கும் கீழமை நீதிமன்றங்களை உடனடியாக திறந்திட வேண்டுமென்றும் 22-07-2020 ம் தேதி இணையதளம் வழியாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படு, அந்த முடிவினை வலியுறுத்துமுகமாக
31-07-2020(வெள்ளிக்கிழமை) காலை 11மணியளவில் ஆர்பாட்டம் நடத்துவதென முடிவுசெய்யப்பட்டது.
வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள் பெருவாரியான வழக்கறிஞர்களை அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க செய்வதின் மூலம் நம்மை எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய போராட்டத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்ததைப்போல் அமையும்.
எனவே 31-07-2020ம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ப.நந்தகுமார்
தலைவர்
JAAC
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..