திங்கள், 6 பிப்ரவரி, 2017

ஒலித்தே ஆகவேண்டும்...

ஒரு கேசட் கடையை வைத்துக்கொண்டு ஒரு சினிமா நடிகைய பழக்கம் பிடித்தால்போதும்
முதலமைச்சராகலாம்.

ஒரு டீ மாஸ்டருக்கு கொலை செய்யத் தெரிந்திருந்தால் போதும் பிரதராகவே ஆகலாம்.

பஞ்சம் பிழைக்கப் போன நாட்டின் வெள்ளி நாணயங்களை உருக்கி விற்று காசாக்கும் உண்டியல் திருடனாலும் இந்தியப் பெட்ரோலியச் சந்தையைக் கைப்பற்ற முடியும்.

அபினுக்கு அடிமையாக்குவதன் மூலம் அண்டை நாட்டு மக்களை திருட்டுப்பய நாட்டுக்கு அடிமையாக்கத் தெரிந்தவன் எல்லாம் பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்த முடியும்.

ரேசன் கடை ஊழியனாக இருந்தாலும் கடற்கரை மணலில் இருந்து தனிமங்களைப் பிரித்து விற்கும் தொழில் நுட்பமும் வாங்குவதற்கான சர்வதேச கடத்தல் உலகத்துடன் தொடர்பும் இருந்தால் போதும் 20ஆண்டில் 15 லட்சம் கோடியுடன் உலகப் பணக்காரர்களின் பட்டியலுக்குப் போக முடியும்.

யார் வேண்டுமானாலும் கிரானைட் பாறைகளைச் சுரண்டலாம்.

யார் வேண்டுமானாலும் கனிம வளங்களைச் சூறையாடலாம்.

யார் வேண்டுமானாலும் விவசாயமெனும் நாட்டின் முதுகெலும்பை ஒடிக்க முடியும்.

யார் வேண்டுமானாலும் விஷக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டலாம்.

யார் வேண்டுமானாலும் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களின் சேமிப்பை சூறையாடலாம்.

தொழிலதிபர் என்ற பெயரில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டலாம்.

யார் வேண்டுமானாலும சாராயம் காய்ச்சி அரசாங்கத்திடமே மொத்த விலைக்கு விற்கலாம்.

ஊருக்கு ஒதுக்குப் புறமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர்களெல்லாம் ஏதோ ஒரு பொதுக் குளத்தை வளைத்துப் போட்டு கட்டிடம் கட்டி கல்லூரி நடத்துவதன் மூலம் கட்டணக் கொள்ளையடித்து கல்வித் தந்தை என்றும் கல்வி வள்ளலென்றும்.  அரசின் விருதுகள் வாங்கலாம் .

உலகநாடுகளில் தடை செய்யப் பட்ட மருந்துகளை கொண்டு வந்து  ஏழை மக்களிடம் விற்று கொத்துக் கொத்தாக கொலை செய்யும் காரியத்தை கண்களைக் குருடாக ஆக்கும் காரியத்தை யார் வேண்டுமானால் செய்யலாம்.ஒரு வேளை நீதிமன்றம் தன்டனை வழங்கினால் ஒட்டுமொத்த மருத்துவர்களும் வேலை நிறுத்தம் செய்து உயிருக்குப் போராடும் நோயாளிகளைக் கொன்றும் கூட குற்றவாளிகளை காப்பாற்றுவார்கள்.

யார் வேண்டுமானால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கடத்தலாம் பதுக்கலாம்.அவர்களுக்கான சந்தையை உருவாக்க உலக வங்கி உத்தரவுக்கினங்க அரசே ரேசன் கடைகளை இழுத்து மூடும்.

என்னே ஒரு அற்புதமான ஜனநாயக நாடு இது.அதனால்தான் உலக வல்லாதிக்க நாடுகளால் ஐநூறு ஆண்டுகளாகச் சுரண்டப் படுகிறோம்.சுரண்டலில் தொய்வு ஏற்பட்டால் முதலமைச்சர்களும் பிரதம மந்திரிகளும் ஜனாதிபதி களும் வெளிநாடுகளைத் தேடிப் போய் கூட்டி வநது முதலீட்டாளர் மாநாடு நடத்தி புதிதாகச் சுரண்டும் முறைகளைக் கற்றுக் கொடுப்பார்கள்.

இவற்றிலும் தொய்வு ஏற்பட்டால்
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றமில்லை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதும் குற்றமில்லை  என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும்.

இவற்றையெல்லாம் பார்த்து பொது மக்களும் குற்றவாளிகளாகவே வாழப் பழக வேண்டும்.குற்றமிழைப்பது பெரிய காரியமில்லை.குற்றமிழைத்தாலும் தப்பிக்கும் தொழில் முறை தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்.

ஆனால் தப்பித்தவறியும் கூட
சுயமரியாதையுள்ள நேர்மையான சமூக ஒழுங்குக்கு கட்டுப்பட்ட
தன்மானமுள்ள மனிதனாக ஆம் மனிதனாக மட்டும் நாம் வாழ்ந்திடக் கூடாது.வாழமுடியும் என்ற என்னமே வந்து விடக் கூடாது.

அதனால்தான் சொல்கிறோம் இது ஒரு போலி ஜனநாயக நாடு.இந்த அரசு கட்டமைப்பு மொத்தமே குற்றவாளிகளைக் காப்பதற்கான தொடர்ந்தும் தைரியமாக குற்றம் புரிபவர்களுக்கான கட்டமைப்பு .

இதன் உள்ளிருந்து கொண்டே ஒருபோதும் சரி செய்யவே முடியாது.சரி செய்வதற்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளுமே திருகு சுழல் போல அதலபாதாளத்திலேயே தள்ளி இருக்கிறது.

முற்றிலும் பழுதடைந்த வீட்டை உள்ளிருந்து கொண்டே சரி செய்ய முயல்வது முட்டாள்தனமான முடிவு வீட்டிற்கு வெளியில் நின்று வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவது தான் அறிவார்ந்த முடிவு.

ஆம் தோழர்களே நன்பர்களே
புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றே சுயமரியாதையுள்ள மனிதனாக வாழ்வதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

தமிழகம்  முழுக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையுமே மெரினாப் போராளிகள் என்ற ஒற்றைக் குறியீட்டில் அடையாயப்படுத்த அனுமதி கோருகிறேன்.

மெரினாப் போராளிகள் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான நம்பிக்கை ஒளிக்கீற்றைப் பாய்ச்சியிருக்கிறார்கள்.எந்த மானவர்கள் இளைஞர்கள் மக்கள் மீது தமிழக காவல்துறை கொலை வெறித் தாக்குதல் நடத்தியதோ அதே மானவர்கள் அதே மெரினாவில் இன்று காயங்களில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே கழிவுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆம் இது ஆளும் வர்க்கத்திற்கான இரண்டாவது எச்சரிக்கை மணி.

மூன்றாவது மணி வரக்கூடிய தேர்தல்களில் ஓட்டுப் போடாதே புரட்சி செய் எனும் இசை முழக்கமாய் தமிழகமெங்கும் ஒலிக்கும்! ஒலிக்க வேண்டும்!!
ஒலித்தே தீர வேண்டும் !!!
                   
                      நன்றி   Kingmaker

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..