புதன், 13 மே, 2020

#முகிலனின்_பதிவும்_ஓவியமும்









எவ்வளவு பெரிய விபத்தில் சிதைந்த உடலையும் ரத்தத்தையும் நேரடியாய் என்னால் அருகில் நின்று அச்சமின்றி பார்க்கமுடியும், தொட்டுத் தூக்கமுடியும். ஆனால், வாந்தியெடுக்கும் காட்சி சினிமாவில் வந்தால்கூட உடனே எனக்கு வாந்தி வரும் அளவுக்கு மன ஒவ்வாமை பலவீனம் எனக்குண்டு. அதற்காகவே, அப்படியான காட்சி வரும்போது சேனலை மாற்றிவிடுவேன். ரோடுகளில் வாந்தியைப் பார்த்தாலும், உமட்டிக்கொண்டு அன்று சாப்பிட சிரமப்படுவேன்‌.

மனிதக் கணக்கிலேயே வைக்கமுடியாத சாதிவெறி நாய்கள் அட்டூழியம் செய்யும் அந்த வீடியோவை நேற்று பார்க்க நேர்ந்தபோது உமட்டலைவிட கடுங்கோபம் தலைக்கேறியது.

இவர்களை எதுவும் செய்யவே முடியாதா? என்ற ஆத்திரமும் அயர்ச்சியும் தவிர வேறெதுவும் மிஞ்சவில்லை....
*
#முகிலனின்_பதிவும்_ஓவியமும்

இரவு தூக்கம் வரவில்லை.

அந்த எளிய பீகார் பெண் மலத்தை உமட்டிக் கொண்டு துப்பிய வேதனை.., மிகுந்த வலியுடன் தூரிகையின் கீழ் படர்ந்தது. உடைந்து போன என் இதயத்தைக் கொஞ்சம் தேற்றிக் கொண்டு இந்த ஓவியம் செய்தேன். எவ்வளவு கீழான மன நோயினைப் பரப்பி விட்டுப் பார்ப்பனியம் இன்னும் உயிர்ப்பித்துக் கிடக்கிறது.                
--வெண்புறா சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..