என்னா மாப்ள..தீபாவளி கொண்டாடலியா....?
போன.....வாரமே...கொண்டாடிட்டேன் மாமா...!
போன வாரமா...அட.... நிஜமாகவா...??
ஆமா... மாமா....நிஜமாத்தான்...!!
ஏலே....தம்பி.... என்னடா மாப்ள... போன வாரமே..தீபாவளிய கொண்டாடிட்டாராமே...??
ஆமா..ண்ணே போன வாரமே கொண்டாடிட்டாரு...!!!
அட..என்னாங்கடா...? சொல்லி வச்ச மாதிரி சொல்லுறிங்க......
உங்களுக்கு தெரியாதண்ணே....!!
அட...சுத்தி வளைக்காம....நேரா..விசயத்த சொல்லுங்கடா....
போன வாரத்துல நம்ம மாப்பிள்ளைக்கும் பக்கத்து வீட்டுகாரங்களுக்கும் சண்டை... பக்கத்து வீட்டுக்காரங்க நாலு பேரு சேர்ந்து அவரு வீட்டுக்குள்ள புகுந்தாங்க... இவரு தடுத்தியிருக்காரு... அவுக மீறி வந்தாதக.... அந்த தள்ளுமுள்ளுல.. பக்கத்து வீட்டுக்காரம்மா கீழே விழுந்திருச்சு... உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிட்டாங்க.... அந்தம்மாவுக்கு நடிப்பு சொல்லியா தரனும் ..அந்தம்மா நடித்த நடிப்புல ... மாப்ள பயந்திட்டாரு.... போலீஸ் ஸ்டேசுன புகார் கொடுத்தாரு... அந்தம்மாவுடைய மகனும் இவரு மேல புகாரு கொடுத்திட்டாரு... ரெண்டு தரப்பு புகாரு மேல வழக்கு பதிந்து எப்ஆரு போட்டு ரெண்டு தரப்பும் ஜாமீன்ல வந்திருக்காக... இனிமே சண்டை போட்டு வந்தா உடனே ரிமாண்டு தாண்டி என எச்சரித்து அனுப்பிிருக்காங்க....
அதத்தான் மாப்ள...போனவராமே தீபாவலிய கொண்டாடிட்டாருன்னு பக்குவமா சொல்லுறாருண்ணே.......
அப்போ.....இனிமே தீபாவளிய கொண்டாடினா.... மாப்ளைக்கு ரிமாண்டுதானா...??
ஆமாண்ணே... பக்கத்துவீட்டுக்காரங்களும் மாப்ளைக்கு தீபாவலி சுவிட் கொடுத்து கொண்டாடினா. .அவுகளுக்கும் ரிமாண்டுதாண்ணே.......
அப்படியா...!!! அப்போ..நாம..தீபாவலிய கொண்டாடினா.... நமக்கும் ரிமாண்டுதானாடா....தம்பி...
சே.சே..... நமக்கெல்லாம் ரிமாண்டு கிடையாதுண்ணே..... நாமதான் அரசுக்கு வாரி வழங்கும் குடிமகன்களாச்சே.......
தப்பிதச்சோம்டா தம்பி, மாப்ள...கிட்டஒன்னும் கேட்காவேண்டாமடா... கிளம்பு கிளம்பு.......
மாப்ள ஒரு அவசரமான சோலி ஒன்னு இருக்கு வரட்டா.....
சரிங்க மாமா...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் விரும்பினால் கருத்துரைக்கலாம்..